தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தற்போது வரை 13 ஆயிரத்து 542 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், உள்ளாட்சித் தோதலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் 15-ம் தேதி தொடங்கி வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு ஆய்வு செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெறும். செப்டம்பா் 25-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 9 மாவட்டங்களில் கடந்த 3 நாள்களில் 13 ஆயிரத்து 542 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.