பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை

 

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராவிட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்விதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் முறையாக வருவதில்லை எனவும், இதனால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் முறையாக வராவிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை வித்துள்ளது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, திட்டமிடப்பட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் எனவும், இதற்காக ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள் திருத்தும் பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!