குழந்தைகளை ஆபாசமாக காட்டினால் கடும் நடவடிக்கை

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குழந்தைகளை ஆபாசமாக காட்டும் தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக எம்.பி கனிமொழி, டி.வி நிகழ்ச்சிகளில் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிப்பதை தடைவிதிக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த  குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, படதயாரிப்பு நிறுவனங்கள் குழந்தைகளை ஆபாசமாக படம் எடுப்பதை கண்காணிக்க மாநில அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அதுபோன்ற தகாத செயலில் ஈடுபடுவோர் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கை தொடரும் எனவும் கூறினார்.

 

 

Translate »
error: Content is protected !!