பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமானால் Covid care centre களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகம் முழுவதும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்..
இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும்,மற்ற மாநிலங்களில் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைவாக உள்ளது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கள், கொரோனா தொற்று உச்சம் பெற்று தான் குறையும் என கூறியுள்ளது குறித்தும் முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதேப்போல், பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமானால் Covid care centre களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..