கொரோனாவுக்கு பின் மாரடைப்பு, ரத்த உறைதல் பிரச்னையால் பலர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டதா என தமிழக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் கொரோனா தொடர்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வு குறித்த விவாதத்தின் போது பேசிய தயாநிதி மாறன், கொரோனாவுக்கு பின் பிரபலங்கள் பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் இதுவரை கொரோனாவுக்கு பிந்தைய பக்கவிளைகள் குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், மேற்கத்திய நாடுகளின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறினார்.
மேலும், ஒமிக்ரான் பாதித்தோருக்கு, 2 டோஸ் காக்டைல் தடுப்பூசியை செலுத்த மருத்துவமனைகள் ஒன்று புள்ளி 20 லட்சம் வரை மக்களிடம் வசூலித்ததாகவும், இதனை மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயல்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினார்.