தமிழகத்தில் திடீர் மின்தடை பிரச்சினை – மக்கள் அவதி

தமிழகத்தின் பல மாவட்டங்களில் திடீர் மின்தடை பிரச்சினையால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.  மின்தடைக்கான காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ‘டுவிட்டர்’பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மின் தடைக்கான காரணம் குறித்து அவர்,

மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைபட்டது எனவும், இதன் காரணமாக, சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும், இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது எனவும், மேலும் ஊரக பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறியிருந்தார்.

 

Translate »
error: Content is protected !!