உக்ரைன் மீதான படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து, ரஷ்யா அதிபரின் ஆலோசகர் திடீரென பதவி விலகியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு சர்வதேச நாடுகள், ரஷ்யாவை சேர்ந்த மக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ரஷ்யா அதிபரின் ஆளுமையின் கீழ் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், ரஷ்யாவின் நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட புதினின் ஆலோசகர்களில் ஒருவரான ஆன்டலி சூபை, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனை தற்போது ரஷ்ய அதிபர் மாளிகையும் உறுதி செய்துள்ளது. மேலும் சூபை தற்போது துருக்கியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.