லஞ்சம் வாங்கிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ் பி உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ். காட்பாடி பகுதியில் விஜய் குமரேசன் என்பவரிடம் 300 ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது இது செய்தியாக ஒளிபரப்பப்பட்டது. லஞ்சம் வாங்கிய காரணத்தால் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பிரகாஷ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின்பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது.