கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான அவசரச் சட்டம்

நகராட்சியாக உள்ள கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான அவசரச் சட்டம் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடலூர் நகராட்சியையும் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை கடந்த தமிழக சட்டப்பேரவையில்,…

90 நீர்த்தேக்கங்கள் 69.32 %  கொள்ளளவை எட்டியுள்ளது

தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் சராசரியாக 69 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும்…

உலக கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து அணி தகுதி

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஓமனை வீழ்த்திய ஸ்காட்லாந்து அணி, சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. அல் அமீரட் நகரில் நடைபெற்ற…

7 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை…

அதிகரித்து வரும் பிட்காயின் மதிப்பு…

பிட்காயின் 66 ஆயிரம் டாலர்களை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பிட்காயின் என்பது உலக அளவில் பிரபலமாகி வருகிற மெய்நிகர் பணம் ஆகும். இது முற்றிலும் மின்னணு முறையிலான பரிமாற்றத்துக்கானது. ரகசிய பண பரிமாற்றங்களுக்கு அதிகளவில் பிட்காயின் பயன்படுகிறது. இந்தநிலையில் இதுவரை…

லக்கிம்பூர் வன்முறை- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர்…

ரஷ்யாவில் நடைபெறவுள்ள தலிபான் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறவுள்ள தலிபான் பிரதிநிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்க உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டனர். ஆப்கானிஸ்தானுடனான நட்புறவை தொடர இந்தியா தயக்கம்…

பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டு யானை- இருக்கைக்குள் ஒளிந்துகொண்ட பயணிகள்

கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் கீழ் தட்டபள்ளம் பகுதியில் காட்டு யானை ஒன்று பேருந்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அண்மையில் பழனியில் இருந்து அரசு பேருந்து 16…

புதுக்கட்சி துவங்குகிறார் பஞ். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும்,  அம்மாநில காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத் சிங் சித்துக்கும் இடையே மோதல் போக்கு நடைபெற்று வந்தது. இதனால் அமரீந்தர் சிங் தனது…

புதிய நீதிபதிகள் இன்று மாலை பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்ரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபீக் ஆகியோர் இன்று பதவியேற்கின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75. தற்போது, தலைமை நீதிபதியுடன் சேர்த்து 56 நீதிபதிகள்…

Translate »
error: Content is protected !!