வரும் 5ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

2022-23 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, வரும் 5ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 5ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அற்விக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது போன்ற தேர்தலின் போது திமுக அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நகர்ப்புற பகுதிகளில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை விரைந்து முடிப்பது உள்ளிட்டவை குறித்தும், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!