தமிழக டி.ஜி.பி அதிரடி சுற்றறிக்கை…

தமிழக அரசின் அரசாணையின் படி கொரோனா ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட குற்ற வழக்குகளைத் தவிற மற்ற வழக்குகளை திரும்பப்பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக டி.ஜி.பி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கொரானா காலத்தில் உத்தரவை மீறியதற்காக போடப்பட்ட வழக்குகள் கைவிடப்படுவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அதற்கான அரசாணை கடந்த மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, சென்னை நீங்க அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மண்டல ஐ.ஜி-க்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் அரசாணைப்படி கொரோனா காலத்தில், ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக போடப்பட்ட 10 லட்சம் வழக்குகளில், வன்முதையில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட வழக்குகள், முறைகேடாக இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது தொடர்பான வழக்குகள், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர்த்து பிற அரசு உத்தரவை மீறியதற்கான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!