இந்திய துணை கண்டத்திலேயே தமிழகம் முன்னோடி மாநிலம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் சென்னை லேடி வில்லிங்டன் மேல்நிலைப்பள்ளியில், நம் பள்ளி நம் பெருமை-பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டார். விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

பள்ளிப்பருவம் என்பது திரும்பக் கிடைக்காத ஒரு மகிழ்ச்சியான பருவமாகும் எனவும், ஆகையால், அப்பள்ளிப்பருவத்தை நீங்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், உங்களிடம் இருந்து யாராலும் அதை பறிக்க முடியாத, திருட முடியாத சொத்து உங்களது கல்வி மட்டும்தான் எனவும், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய மூவரது சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இருந்தல் வேண்டும் எனவும், ஒருவர் தடங்கல் போட்டாலும் கல்வியானது தடம் புரண்டுவிடும் எனவும், உங்கள் குழந்தைகள் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களுக்கு நீங்கள் தடை போடாமல், அவர்களுக்கு உதவி செய்யுங்கள், வழிகாட்டுங்கள் எனவும் கூறினார்.

மேலும், பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் இந்திய துணைக்கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கிக்கொண்டிருக்கிறது எனவும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.36 ஆயிரத்து 895 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது எனவும், அரசு பள்ளிகளை முழுமையாக மேம்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மைக் குழுக்களை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறத எனவும்,. பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் இந்த பள்ளி மேலாண்மை குழுவில் இடம் பெறுவார்கள் எனவும் கூறினார்.

அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், பள்ளிகளில் நமது குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க தமிழ்நாடு அரசு முன்னெடுக்கக்கூடிய இந்த முயற்சிக்குக் கை கொடுக்க வாருங்கள் என்று உங்களை எல்லாம் மிகுந்த பணிவோடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன் எனவும், நம் பள்ளி நம் பெருமை என ஆனால்தான் நம் நாடு, நம் பெருமை என ஆகும் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!