நூல் விலை உயர்வு தொடர்பாக தமிழக எம்.பிக்கள் இன்று நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளனர். நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் நெசவாளர்கள் சுமார் 2 லட்சம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நூல் விற்பனையை நீக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். நூல் விலை உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்துள்ளதுடன், சுமார் 500 கோடி ரூபாய்க்கு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பருத்தி, நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி இன்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான எம்.பிக்கள் குழு இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.