உக்ரைனின் எல்லைகளில் தத்தளிக்கும் தமிழக மாணவர்கள்

 

உக்ரைனின் எல்லைகளில் தத்தளிக்கும் தமிழகம் மற்றும் புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், உக்ரைனில் இந்திய மாணவர்கள் தத்தளித்து வருவதை நினைத்து கவலைக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடி சூழலில் மாணவர்களை மீட்க மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய அவர்,  பதற்றமான இடங்களில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மாணவர்கள் தவிப்பதாக தெரிவித்துள்ளார். அவர்கள் ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேக்கியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளுக்கு வர முடியாமல் தவிப்பதாக அவர்கள் பெற்றோர்களை கூறுவதாக குறிப்பிட்ட அவர்ககூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!