தமிழகம் கொரோனா பாதிப்பிலிருந்து படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மீண்டும் டெங்கு வைரஸ் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. தற்போது மட்டும் தமிழகத்தில் 511 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.