ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்…

ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு டாடா குழுமம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வராத சூழலில், கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு மீண்டும் தீவிரப்படுத்தியது. ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தி, கடந்த செப்டம்பர் 15-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து, ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது.இதன் மூலம் 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!