நியூ மெக்சிகோ மாகாண காட்டுத் தீயை அதிபர் ஜோ பைடன் பேரிடராக அறிவித்தார். இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீயால் அழிந்துள்ளது.
லாஸ்வேகாஸ் நகரை தீ நெருங்கி வரும் நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். ஹெலிகாப்டர்களும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
நியூ மெக்சிகோ மாகாணத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றமே காட்டுத் தீக்கு காரணம் என்று அறிவியலாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.