உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான டெட்ரோஸ் அதனோம் உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருக்கிறார்.
இவரது பதவிக்காலம் முடிந்த நிலையில், 2வது முறையாக அவர் மீண்டும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
இந்நிலையில், டெட்ரோஸ் அதனோமை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால், அவர் மீண்டும் இந்த அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவராக அவர் செயல்படுவார்.