கருகலைப்பு தடை சட்டம் கடுமை

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் கருகலைப்பு தடை சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் திருமணம் ஆகாமல் கருத்தரிக்கும் பெண்களுக்கு என காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் கருக்கலைப்பு தடை சட்டம் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி ஒரு தாய் கர்ப்பக் காலத்தின் ஆறு வாரங்களுக்குப் பிறகு, வயிற்றில் வளரும் கருவுக்கு இதயத் துடிப்பு உண்டாகியிருந்தால் அக்கருவைக் கலைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கு எதிராக அந்த மாகாணத்தில் பெண்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இச்சட்டத்தால் திருமணம் ஆகாமல் எதிர்பாராத விதமாக கருத்தரிக்கும் பெண்கள் தங்கள் கர்ப காலத்தை கடக்க முடியாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். இந்த நிலையில் அவ்வாறு எதிர்பாராமல் கருத்தரிக்கும்  பெண்களுக்கு என தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பெண்கள் தங்கள் கருத்தரிப்பு காலத்தை கடந்து ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!