சிறந்த விவாதமே செய்தியாக வேண்டும் – துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு

நாடாளுமன்றத்தில் சிறந்த விவாதமே செய்தியாக அமைய வேண்டும் என தான் விரும்புவதாக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும்  72 எம்.பிக்களுக்கான பிரிவு உபசார நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,  கடந்த 4 ஆண்டுகளாக அவையை சுமூகமாக நடத்த முடியாத நிலை காணப்பட்டதாக தெரிவித்தார். இதனால் 35 சதவீத அவை நேரம் வீணடிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இதனை முன்கூட்டியே சரிசெய்வது சிறந்தது என தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்றத்தில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகளை செய்தியாக்காமல், ஆக்கப்பூர்வமான விவாதங்களை செய்தியாக்க வேண்டும் என ஊடகங்களை கேட்டுக்கொண்ட அவர், உறுப்பினர்களும் பகுப்பாய்வு மூலம் துறை சார்ந்த கேள்விகளை விவாதத்தில் எழுப்ப வேண்டும் என கூறினார்.

 

Translate »
error: Content is protected !!