பாஜகவின் தேர்தல் அறிக்கை போல தோன்றுகிறது மத்திய பட்ஜெட்

2022-23 மத்திய பட்ஜெட் பாஜக-வின் தேர்தல் அறிக்கை போல தோன்றுவதாக மகாராஷ்டிர அமைச்சரும், முதல்வர் உத்தவ்தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஏழை எளிய மக்களுக்கு பயன் தரும் அம்சங்கள் இதில் ஒன்று கூட இடம் பெறவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதித்யா தாக்கரே, பட்ஜெட்டில் பெரும்பாலும் அறிவிப்புகளே இடம் பெற்றுள்ளதாகவும், ஆனால் அந்த அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வருவது மிக முக்கியம் என குறிப்பிட்டார்.

மேலும் பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக தரம் உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவை எப்போது முடிவடையும் என்ற கால வரையறை எதும் அறிவிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!