உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தொடக்கி வைத்தார் முதல்வர்

திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை நாமக்கல்லில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல் – சேலம் சாலை பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாநாட்டினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 9 மணிக்கு துவக்கி வைத்தார் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. வரவேற்புரை பேசினார்கள். அதன் தொடர்ச்சியாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகின்றனர்.

மேலும், மத்தியில் கூட்டாட்சி-மாநிலத்தில் சுயாட்சி என்கிற தலைப்பில் ஆ.ராசா எம்.பி., தி.மு.க. உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்கிற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி., திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்கிற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுதான் திராவிட இயக்கம் என்கிற தலைப்பில் சுப.வீரபாண்டியன் , பெண்களின் கையில் அதிகாரம் என்கிற தலைப்பில் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசுகின்றனர்.

பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மக்களோடு நில், மக்களோடு வாழ் என்கிற தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகிறார். அதை தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர் பேசுகின்றனர். இறுதியாக மாலை 4 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார், முடிவில் அமைச்சர் மதிவேந்தன் நன்றி உரையாற்று உள்ளார்.

Translate »
error: Content is protected !!