தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர்

 

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் ‌ அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை இரண்டு நாட்கள் நேரில் ஆய்வு செய்கிறார் தமிழக முதலமைச்சர்.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 24ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது..தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக மேட்டூருக்கு சென்று அணையிலிருந்து நீரை திறந்து வைத்தார்.

இந்த நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில், அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக நாளை காலை மதுரைக்கு விமானம் மூலம் செல்லக்கூடிய தமிழக முதலமைச்சர், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு செல்கிறார். புதுக்கோட்டையில் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கக்கூடிய தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

பின்னர், புதுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய தமிழக முதலமைச்சர் அங்கு இரவு தங்குகிறார். நாளை மறுநாள் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்யும் அவர், தொடர்ந்து தஞ்சாவூரிலும் ஆய்வுகளை மேற்கொள்கிறார்

இறுதியாக திருச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடிய பணிகளை ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகள் என சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!