பாஜகவை விட காங்கிரஸ் சிறந்த கட்சி

பாஜகவை விட, காங்கிரஸ் சிறந்த கட்சி என்பதை காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக்பூபா முப்தி புரிந்து கொண்டுள்ளதாக மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாக விலை வாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் பதாகைகளுடன் வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றும், அதனை விட்டுத்தர முடியாது என கூறியுள்ளார். அரியானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மதமாற்ற தடை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், இது மதசார்பற்ற இந்தியாவின் கொள்கைக்கு எதிரானது என்றும், எரிபொருள் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Translate »
error: Content is protected !!