புதுவையில் பரவத்தொடங்கியது கொரோனா

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியை சாந்த 3 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,65,797 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,63,827 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!