மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவரது பண்ணையில் கோழி 210 கிராம் எடை கொண்ட முட்டையிட்டுள்ளது. அதை லிம்கா சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பிப்பது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார். இந்த முட்டைதான் நாட்டிலேயே அதிக எடை கொண்ட முட்டையாகக் கருதப்படுகிறது. இந்த முட்டைக்குள் 3 அல்லது 4 மஞ்சள் கரு இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.