அமெரிக்காவின் ஒக்லஹோமோ மாகாணத்தில் வீசிய சூறாவளிக் காற்றால் செமினோல் கவுண்டி பகுதி கடும் சேதத்தை சந்தித்தது. வீடுகளின் கூரைகள் பறந்ததுடன் மின்கம்பங்கள் சாய்ந்தன.
14 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலைகள் முழுவதும் ஒரே குப்பை கூளமாக காட்சி அளிக்கிறது.
உயிரிழப்புகள் குறித்து இதுவரை தகவல் இல்லை என்று கூறியுள்ள நகர நிர்வாகம், மீட்பு பணிகள் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.