குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நேற்று உலக சுகாதார நிறுவனத்தின் பராம்பரிய மருத்துவத்துக்கான உலக மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்பதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனரான டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் இந்தியா வந்தார்.
தலைநகர் டெல்லியில் கெப்ரியேசசை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று சந்தித்துப் பேசியதைப் பற்றி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஆயுர்வேதத்தை சர்வதேச மருத்துவ முறையாக வளர்ப்பது குறித்து கெப்ரியேசஸ் உடன் விவாதித்ததாகவும், இந்த சந்திப்புக்கு முன்பு, மாண்டவியாவுடன் டெல்லி அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்துக்கு கெப்ரியேசஸ் சென்று பார்வையிட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.