தோல் தொழிற்சாலைகளை பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்கு உண்டு

 

பாரம்பரியமாக செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பு அரசுக்கு இருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடி, ஆம்பூரில் 3 தோல் தொழிற்சாலை பிரதானமாக உள்ளதாகவும், இத்தொழிலை பாதுகாக்க தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக ஏற்றுமதி பொருளாதாரத்தில் தோல் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். தற்போது இத்தொழிலில் பாதிப்புகள் ஏற்றுபட்டாலும், தோல் தொழிற்சாலைகளை பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்கு உள்ளதாகவும், சுற்றுச்சூழல் அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

 

Translate »
error: Content is protected !!