வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை கோயில் அர்ச்சகர் விரட்டிய சம்பவம்

கோயிலில் வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை, கோயில் அர்ச்சகர் விரட்டி அடித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

தும்கூர், கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் நிட்டூர் கிராமத்தில் உள்ள முளுகாட்டம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றது. மாலை, தேங்காயுடன் அவர்கள் கோவிலுக்குள் சென்றனர். அப்போது கோவிலில் இருந்த அர்ச்சகர் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

வழிபாடு செய்யச் சென்ற தலித் குடும்பத்தினரை, அர்ச்சகர் கோயிலை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியதுடன், கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது என்றும் கூறியதாக கூறப்படுகிறது. ஏன் கோயிலுக்குள் வரக்கூடாது என அவர்கள் கேள்வி எழுப்பிய போது, உங்களுக்கு எல்லாம் பூஜை செய்ய முடியாது எனக்கூறி, விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிகழ்வு குறித்து கோயிலில் இருந்த ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியதையடுத்து இந்த சம்பவம் குறித்து தும்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!