காலமானார் பாடகி லதா மங்கேஷ்கர்

இசைத்துறையின் ஜாம்பவான் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும்  ஒருநாள் போட்டியில், வீரர்கள் கருப்பு பட்டை  அணிந்து விளையாட உள்ளனர். பன்முக மொழிகளில் மெல்லிய குரலை ஒலிக்க செய்த பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், உடல்நல குறைவால்  இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிசிசிஐ சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அகமதாபாத்தில் இன்று இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஒரு நாள் போட்டியில் வீரர்கள்  கருப்பு பட்டை  அணிந்து  பங்கேற்பார்கள் என்றும், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் கட்டப்படும் எனவும் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்……….

Translate »
error: Content is protected !!