சென்னைக்கு வெளியூரிலிருந்து வரக்கூடிய பொதுமக்கள் இரண்டு மூன்று தினங்களுக்கு தங்களது பயணத்தை ஒத்தி வைக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தினை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளதாகவும் மற்றும் மாலை பாதிக்கப்பட்ட தென் சென்னை பகுதியில் ஆய்வை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். மேலும், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றவும், அதனை சார்ந்த மீட்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மீட்பு பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு பணியினர், காவல்துறையினர், தீயணைப்பு துறை அலுவலர்களும் இந்த பணியில் ஒருங்கிணைந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.