வாக்கு எண்ணிக்கை முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில், நாளை அத்தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதையொட்டி, தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு, வாக்கு எண்ணும் அலுவலர்கள் காலை 6.30 மணிக்கு வந்துவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவிக்கள், மேசைகள் போதியளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், உரிய அடையாள அட்டையின்றி எவரையும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம்  மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

Translate »
error: Content is protected !!