காவல்துறையில் பெண்களின் பணி முக்கியம் – முதலமைச்சர் மம்தா பானர்ஜி

 

காவல்துறையில் பெண்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய அவர், குற்றச் செயல்களை கையாளும் மாநில காவல்துறையின் பல்வேறு மட்டங்களில் பெண்கள் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மேற்கு வங்க காவல்துறையினருக்கும் இடையே சமத்துவமின்மை நிலவுவதாக குறிப்பிட்டார். ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு உதவித்தொகையாக 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் பட்சத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு 200 ரூபாய் மட்டுமே கிடைப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!