சென்னை பட்டினப்பாக்கத்தில், பணி நிரந்தரம் கோரி குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று பணிகளில் கிட்டதட்ட 1,800 பேர் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி 300க்கு மேற்பட்ட ஊழியர்கள் பட்டினப்பாக்கத்தில் உள்ள நகர நிர்வாக அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய தற்காலிக பணியாளர்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிநிரந்தரம் வழங்கப்படாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டினார். 3 நாட்கள் நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், சென்னையில் மொத்த கழிவுநீர் அகற்றும் பணிகளும் பாதிக்கப்படும் என கூறிய அவர், சென்னை நிலை என்ன ஆகும் என கருதி அரசு உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.