2024ல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை பாஜக இப்போதே தொடங்கி உள்ளது. அதற்காக விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் சில மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் புதிய அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அதற்கு பதிலாக 10 முதல் 12 அமைச்சர்கள் வரை நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது.