மதுரையிலிருந்து போடிக்கு கொண்டு வரப்படும் அகல ரெயில் பாதை திட்ட பணிகளை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத்ஆய்வு செய்தார்.நிறைவு பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கலந்தாய்வு நடந்தது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரைக்கும் நடைபெற்று வரும் அகல ரயில் இருப்பு பாதை பணிகள் நிறைவு கட்டத்தை அடைந்துள்ள நிலையில்மிகவும் தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி எம்பி ரவீந்திரநாத் ரயில்வே இருப்புப் பாதை நிறைவு பணிகளை ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் மூலம் சுப்புராஜ் நகர் பகுதியில் வசிக்கும் சுமார் 2000திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுவதால் அப்பகுதியில் நடைபெறும் இருப்புப்பாதை பணிகளை ஆய்வு செய்து அதன் நிறை குறைகளை கேட்டறிந்தார்.
ரயில்வே திட்ட பணிகளின்போது அகற்றப்படும் ஆக்ரமிப்பு பகுதிகள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவை நடந்து சென்று ஆய்வு செய்த பொழுது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எம்.பியை நேரடியாக சந்தித்து இருப்புப் பாதை வருவதால் ஏற்படும் சிரமங்கள் குறித்து கூறினர். பொதுமக்களது நிறைகுறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மேலும் இதுகுறித்து தென்னிந்திய ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்வே திட்டப் பணிகளின் வரைபடத்தை ஆய்வு செய்து மக்களைப் பாதிக்காத வகையில் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றுகூறினார். அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரயில்வே திட்டப்பணிகள் நிறைவு நிலையை அடைந்துள்ளதாகவும் பணிகள் மத்திய ரயில்வே திட்டப்பணிகள் என்பது தனி பிரிவு சார்ந்தது என்றும் இப்பணிகளுக்கு சில விதிமுறைகள் உள்ளன என்றும் வரைபடத்தை ஆய்வு செய்து அதிகாரிகளை கலந்து ஆலோசனை செய்ததாகவும் மக்களை பாதிக்காத வகையில் திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் கூறினார்
மேலும் இப்பகுதியில் ஆக்கிரமிப்பில் வீடு இழந்தவர்களுக்கு போடி நகராட்சியில் கலந்து ஆலோசனை செய்துஉரிய நிவாரண நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். இந்த ஆய்வின் போது தேனி பாராளுமன்ற எம்.பிரவீந்திரநாத்உடன் போடி தாசில்தார் செந்தில் முருகன், நகராட்சி ஆணையர் சகிலா, நகராட்சி முதன்மை என்ஜினீயர் செல்வராணி மற்றும் சர்வேயர் உடனிருந்தனர்.