அதிமுகவை மீட்டெடுப்பதே தங்களது நோக்கம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுகவின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததாகவும், மகிழ்ச்சியை அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை எனவும், தமிழகத்தில் காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். அம்மா உணவக திட்டத்தை ரத்து செய்யக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.