தேனி மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 150 கிலோவிற்கும் மேல் கெட்டுப்போன மீன், ஆட்டு இறைச்சிகள் மற்றும் காலாவதியான மளிகை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பக்திகளில் கெட்டுப்போன மீன்கள், இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தென்கரை மீன் மார்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் இருந்து இதுவரை 150 கிலோவிற்கும் மேல் கெட்டுப்போன மீன், ஆட்டு இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், காலாவதியான மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.