ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது மத்திய அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துமே தவிர லாபத்தை ஈட்டாது என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ரயில்வே துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அத்துறையின் வளர்ச்சிக்காக முழுமையாக பயன்படுத்தவில்லை என்றும் ரயில்வே துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முன்வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதால் அரசுக்கு நஷ்டமே தவிர, லாபம் இல்லை எனவும் கூறினார். நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை அரசு வைத்துக்கொண்டு, லாபத்தில் இயங்கும் ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பதா? எனவும் கேள்வி எழுப்பினார். ரயில்வே துறையில் ஒட்டுமொத்தமாக 2.4 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் தமிழ் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.