அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அசோக் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் தேங்கி இருந்தது.
இந்நிலையில் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாநகரத்தின் உள்ளேயும் மழை நீர் சூழ்ந்துள்ளது. பள்ளி வகுப்பறை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் இந்த பள்ளி இன்று வழக்கம்போல் இயங்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அந்த மழைநீரை பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்ற போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பள்ளி வளாகத்தில் உள்ள மழை நீரில் ஏராளமான தவளைகள் இறந்த நிலையில் காணப்படுகின்றன. 20-க்கும் மேற்பட்ட தவளைகள் மின்சார பாய்ந்து இறந்து இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது வரையில் இந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படாமல் உள்ளது. மழை நீர் சூழ்ந்துள்ளதுடன் தவளைகள் இறந்து கிடப்பதால் மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு போதிய பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலை இருக்கிறது.