கூடுதல் தரவுகளை இணைத்து வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் அன்புமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருத்தமளிக்கிறது என்றார்.
ஆனாலும், சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பி இருந்த 7 கேள்விகளில் 6 தவறானவை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் கூறினார். அதிமுக அரசு உள் இடஒதுக்கீடு சட்டத்தை முறையாகத்தான் கொண்டு வந்ததாகவும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதங்கள் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாகவும் அன்புமணி குறிப்பிட்டார்.