விலங்கியல் பூங்கா, பறவைகள் சரணாலயம் உள்ள பகுதிகளை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம், தொழிற்சாலைகள் இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இயற்கை வளம் பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் வழக்கினை விசாரித்த நீதிமன்றம், சுற்றுசூழல் பாதுகாப்பு மண்டலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகளை பின்பற்ற வலியுறுத்தியுள்ளது.
மேலும் இந்த பகுதிகள் அருகே உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அந்தந்த பகுதி தலைமை வனப் பாதுகாவலரின் அனுமதி அவசியம் என உத்தரவிட்ட நீதிமன்றம், பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அருகேவுள்ள ஆலைகள், சுரங்கங்கள் குறித்த தகவல்களை சேகரித்து அந்தந்த மாநில தலைமை வனப் பாதுகாவலர்கள் 3 மாதங்களில் சமர்பிக்க அறிவுறுத்தியுள்ளது.