திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மருத்துவர்கள் தேவை என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுப்பிரமணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களின் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அக்கோவிலில் மருத்துவர்களுக்கான பணி காலியாகவுள்ளதால் அப்பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், இந்து மதத்தினர் மட்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், திருத்தணி முருகன் கோயிலில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள முதலுதவி மருத்துவ மையத்துக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் தேவை எனவும் தகுதியானவர்கள் நவம்பர் 12-ம் தேதிக்குள் www.tiruttanigaimurugan.org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.