செஸ் ஒலிம்பிக் தொடர் சென்னையில் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளது மக்கள் நல்வாழ்வு துறை44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் 187 நாடுகளை சார்ந்த 350 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களை தங்க வைக்க 4 மற்றும் 5 ஸ்டார் நட்சத்திர விடுதிகளில் 2600 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
செஸ் போட்டியில் பங்கு பெற வரும் விளையாட வீரர்கள் கண்டிப்பாக பரிசோதனை உட்படுத்தப்பட்டு நெகட்டிவ் சான்றிதழ் பெறப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டுகளிலிருந்து வரக்கூடிய விளையாட்டு வீரர்களுக்கு வரும்பொழுது அதற்கான சான்றிதழை கொண்டு வரவேண்டும்.
மீண்டும் இங்கேயும் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டால் அதுதொடர்பான சிகிச்சையை தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்திருக்கிறது. விளையாட்டு வீரர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கக்கூடிய தனியார் விடுதியில் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான துவக்க விழா ஜூலை 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். துவக்க விழாவில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்கள் விளையாட்டு துறை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா மற்றும் குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக வழிகாட்டு நெறிமுறைகளை செஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் குழுவிடம் வழங்கி உள்ளது.