இன்று 67 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

டெல்லியில் இன்று 67 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார். சிறந்த தமிழ் படத்திற்கான விருதை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் பெறும் நிலையில், இதில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார். சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து  சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்துக்காக டி.இமான் பெறுகிறார்.

இதேபோல், பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் வழங்கப்படுகிறது. மேலும் திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட உள்ளது.

Translate »
error: Content is protected !!