கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சற்று குறைவு

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தக்காளி விலை தற்போது சற்று குறைந்திருக்கிறது.

கோடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும் சென்னைக்கு வரக்கூடிய வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை அதிகரித்தது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 110 ரூபாயை கடந்த நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் தொடர்ந்து விலை குறைந்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரு கிலோ நாட்டு தக்காளியின் விலை 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!