உலகின் மிக வயதான நபர் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்ட வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, நாளை 113 வயதை எட்டுகிறார். நல்ல ஆரோக்கியத்துடன் தினமும் அளவாக மதுக் குடித்து வரும் பெரெஸ் மோராவுக்கு 41 பேரக் குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக் குழந்தைகள் மற்றும் 12 எள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர் என கின்னஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது மூப்பு காரணமாக காது கேட்கும் திறன் பாதிப்பு தவிர அவர் பூரண நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 1909-ம் ஆண்டு பிப்ரவரி 11ல் ஸ்பெயினில் பிறந்த சடர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா என்ற 112 வயது நபர் இறந்ததையடுத்து உலகின் மிக வயதான நபராக பெரெஸ் மோரா அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.