மசூதிகளில் ஒலிப் பெருக்கிகளை எடுக்க நாளை கடைசி நாள்

 

மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற ராஜ் தாக்கரே விடுத்திருந்த கெடு நாளை முடிவடைய உள்ள நிலையில் மகாராஷ்டிராவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மகாராஷ்டிரா தின கொண்டாட்டத்தையொட்டி அவுரங்காபாத்தில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உரையாற்றினார்.

அப்போது மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான காலக்கெடு நாளை முடிவடைய உள்ள நிலையில் அதன் பிறகு என்ன நடக்கும் என்பதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன் என கூறியுள்ளார்.

உத்தரபிரதேச அரசால் ஒலிபெருக்கிகளை அகற்ற முடிகிறபோது, உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு அவ்வாறு செய்வதைத் தடுப்பது எது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மே 4 முதல் அனைத்து இந்துக்களும் ஹனுமான் பாடல்களை, மசூதி ஒலிப்பெருக்கிகளின் அளவை விட இரட்டிப்பாக ஒலிக்கச் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாமியர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், நாங்கள் அவர்களுக்கு மகாராஷ்டிராவின் சக்தியைக் காட்டுவோம் எனவும் எச்சரித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

 

Translate »
error: Content is protected !!