மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹைட்ரஜனில் இயங்கும் மின்சார காரில் நாடாளுமன்றம் வந்திறங்கினார்.
நாட்டில் எரிபொருள் பயன்பாடு காரணமாக சுற்றுசூழல் மாசு அடைந்து வருகிறது. மேலும் எரிபொருள் தட்டுப்பாடும் அதன் விலையை அதிகரிக்க செய்துள்ளது. இந்தநிலையில், இதற்கு மாற்று வழியாக ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் மின்னணு வாகனத்தை தயாரிக்கும் முயற்சியில் டொயாட்டோ கார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அண்மையில் ஹைட்ரஜன் உதவியுடன் இயங்கும் முதல் மின்னணு கார் ஆன மிராயின் சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இன்று அதே காரில் நாடாளுமன்றம் வந்துள்ளார். இந்த கார் உற்பத்தியால் ஏற்றுமதியும், தொழில் வாய்ப்பும் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.